பல நோய்களைத் தீர்க்கும் கீரைகள் - லிஸ்ட் இதோ.!
benefits of keerai
கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் எந்தெந்த கீரைகளை சாப்பிட்டால் எந்தெந்த நோய் குணமாகும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* அகத்திக்கீரை:- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.
* காசினி கீரை:- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்; உடல் வெப்பத்தை தணிக்கும்.
* சிறு பசலைக்கீரை:- சரும நோய்களை தீர்க்கும்; பால்வினை நோயை குணமாக்கும்.
* மஞ்சள் கரிசலை:- கல்லீரல் வளமாக்கும்; காமாலையை விளக்கும்.
* குப்பை கீரை:- பசியை தூண்டும்; வீக்கம் வத்த வைக்கும்.
* புளியங்கீரை:- சோகையை விளக்கும் கண் நோய் சரியாகும்.
* பொன்னாங்கண்ணி கீரை:- உடல் அழகையும் கண் ஒளியையும் அதிகரிக்கும்.
* முருங்கைக்கீரை:- நீரிழிவை நோயை நீக்கும்; உன் கண்கள் உடல் பலம் பெறும்; ஆண்மையை பெருக்கும்; தசைகளை பலமடைய செய்யும். * வெள்ளை கரிசலை கீரை:- ரத்த சோகையை நீக்கும்.
* வல்லாரைக்கீரை:- மூளைக்கு பலம் தரும்.
* நஞ்சுமுண்டான் கீரை:- விஷமுறிக்கும்.
* தும்பை கீரை:- அசதி, சோம்பல் நீக்கும்.
* முள்ளங்கி கீரை:- நீரடைப்பு நீக்கும்.
* கொடிகாசினி கீரை:- பித்தம் தணிக்கும்.
* முளை கீரை:- பசியை ஏற்படுத்தும்; நரம்பு பலமடையும்.
* முடக்கத்தான் கீரை:- கை, கால் முடக்கம் நீக்கும்; வாயு விலகும்.
* புதினா கீரை:- ரத்தத்தை சுத்தம் செய்யும்; அஜீரணத்தை போக்கும்.
* கல்யாண முருங்கைக்கீரை:- சளி, இருமலை போக்கும்.
* வெந்தயக்கீரை:- மலச்சிக்கலை நீக்கும்; மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும்.
* மணத்தக்காளி கீரை:- வாய் மற்றும் வயிறு புண்ணை குணமாக்கும்; தேமல் போக்கும்.
* துத்திக் கீரை:- வாய், வயிற்றுப்புண் அகற்றும்; வெள்ளை மூலம் விளக்கும்.