கொய்யாப்பழத்துடன் இதனை சேர்த்து சாப்பிட்டால், என்னென்ன நன்மைகள் தெரியுமா?..! - Seithipunal
Seithipunal


ஆப்பிளை விட கூடுதலான சத்துக்களை கொண்ட கொய்யாப்பழம் குறித்த நன்மைகளை இன்று நாம் காணலாம். மேலும், ஆப்பிளை விட கொய்யாப்பழம் விலையிலும் மிகவும் மலிவானது எனப்து குறிப்பிடத்தக்கது. 

கொய்யாப்பழத்தில் உள்ள சக்தியும், ஆரோக்கியமும் ஆப்பிளை விட அதிகமானது. நன்றாக பழுதுள்ள கொய்யாப்பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலின் சோர்வு, பித்தம் போன்ற பிரச்சனைகள் சரியாகும். 

கொய்யாப்பழத்துடன் சப்போட்டா மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெற்று இரத்தம் சுத்தமாகும். மத்திய நேர உறவுக்கு பின்னர் கொய்யாப்பழம் சாப்பிட்டால், உணவு ஜீரணமாகி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. வயிற்றுப்புண் பிரச்சனையை சரி செய்கிறது. 

இதுமட்டுமல்லாது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், வயிற்றுப்போக்கு பிரச்சனை, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து தலையில் பற்று போல போட்டு வந்தால் கடுமையான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி சரியாகும். 

கொய்யா இலைகளை அரைத்து நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று வலி, தொடைப்புண் போன்ற பிரச்சனை சரியாகும். கொய்யாப்பழத்தில் அமில தன்மையும் உள்ளதால், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Koyya Fruit or guava Fruit Health Tips


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->