பயங்கரவாத தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா பேசியது என்ன?
actor Suriya about terrorist attack
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மேலும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,அண்மையில் நடிகர் 'சூர்யா' நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் 'சூர்யா' வேதனையுடன் உரையாடினார்.
சூர்யா:
அவர் தெரிவித்ததாவது, "எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும். இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்க கூடாது என விரும்புகிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக என் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.இச்செய்தி தற்போது ரசிகர்கள் பலரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
actor Suriya about terrorist attack