காஷ்மீரில் மீண்டும் அதிர்ச்சி: கண்டி காஸ் பகுதியில் சமூக சேவகரை சுட்டுக்கொலை செய்துள்ள பயங்கரவாதிகள்..!
Shock again in Kashmir Social worker shot dead in Kandy Gas area
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். இந்த சம்வபம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் லஸ்கர் இ-தொய்பாவின் நிழல் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் வேட்டையில், 05 பேரின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு ராணுவத்தினரால் சுற்றி வளைத்து தகர்க்கப்பட்டது.
அத்துடன், 03 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் 45 வயதுடைய குலாம் ரசூல் மாக்ரே என்ற சமூக சேவகர் ஒருவர் சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று, இரவில் கண்டி காஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நுழைந்து நபர்கள் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரசூல் மாக்ரே கொல்லப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த கொலைக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக காஷ்மீரின் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும் என்ற பயங்கரவாதிகள் சதியின் மற்றொரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
English Summary
Shock again in Kashmir Social worker shot dead in Kandy Gas area