சூப்பர் பா!!! நடிகர் கவின் அனிருத்துக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு...!
Actor Kavin posted thanking Anirudh
தமிழ் திரையுலகில், முன்னணி நடிகராக இருப்பவர் 'கவின்'. இவர் 'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'பிளடி பெக்கர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.இதைத்தொடர்ந்து, தற்போது, கவின் பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் 'கிஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி 'ப்ரீத்தி அஸ்ரானி' கதாநாயகியாக நடிக்க 'ரோமியோ பிக்சர்ஸ்' ராகுல் தயாரித்துள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 30-ந் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் 'கவின்' தனது எக்ஸ் தளத்தில் இசையமைப்பாளர் அனிருத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதாவது, ஜென் மார்ட்டின் இசையில் உருவாகியுள்ள 'கிஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை அனிருத் பாடியுள்ளார்.
அந்த பாடலின் புரோமோ வீடியோவை பகிர்ந்து, "தன் பல வருட கனவு நிறைவேறியது, அதற்கு மிகவும் நன்றி அனி" என்று கவின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
English Summary
Actor Kavin posted thanking Anirudh