மந்தாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
benefits of mandharai keerai
மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது' என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை. இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும்.
இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும் இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), திருத்திலதைப்பதியிலும் தலமரமாக விளங்கிறது.
இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.
மலர்கள், மிதமான பேதி மருந்து, உலர்ந்த மொட்டுக்கள், பூச்சிகளை நீக்கும். சீதபேதி மற்றும் மூலவியாதியை குணப்படுத்தும். பட்டை வயிற்றுப்போக்கில் பயன்படும். வேர்ப்பட்டை தயிர் உடன் கலந்து இரத்தக்கட்டிகளை குணப்படுத்த உதவும். அரைத்த வேர்ப்பட்டை சுக்குடன் கலந்து குரல்வளை சுரப்பி வீக்கத்துக்கு தடவப்படுகிறது. வேர் அஜீரணத்தைப் போக்கும்.
மந்தாரைப் பட்டை சதை, நரம்புகளைச் சுருக்கி ரத்தம், சீழ்க்கசிவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை, நோய் நீக்கி உடல் தேற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; உடல் பலம் மிகுக்கும். முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது மந்தாரை.
தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத்தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல்வலி, மன அழுத்தம், போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
அதிகமான தைராய்டு சுரந்தால் இதயத்துடிப்பு அதிகமாகும், எடை குறையும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். காஞ்சனாரம் என்று அழைக்கப்படும் மந்தாரைத் தாவரம் தைராய்டு நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுகிறது. இதனை மருந்தாக உட்கொள்வதன் மூலம் தைராய்டு சுரப்பினை சீராக்குவதோடு, உடல் நலனை சீராக்கும்.
இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும் இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும்.
மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால் வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம்.
English Summary
benefits of mandharai keerai