உடலை வலிமையாக்கி பாதுகாக்கும் முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள்.!
Benefits of murungai keerai
உடலை வலிமைப்படுத்தும் சக்தி முருங்கைக் கீரைக்கு உண்டு. நரம்புகளை வலுப்படுத்தும் தன்மையும் உண்டு. மேலும், இது ஆண்மை பிரச்சனையையும் சரி செய்கிறது. முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும்.
முருங்கைக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் குணமாகும்.
தினமும் முருங்கைக் கீரை வகை உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயானது எளிதில் கட்டுக்குள் வரும்., நமது கண்பார்வையும் தெளிவாக தெரியும்
முருங்கைக் கீரையை சுடு தண்ணீரில் வேகவைத்து அதன் சாற்றை குடித்தால் உடல் சூடு தணிந்து மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். முருங்கை கீரையில் மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் அனைத்தும் குணமாகும்.
முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். மேலும், உடல் உறுதி பெறும்.
English Summary
Benefits of murungai keerai