காளானில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


காளான்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* எடையைக் குறைக்க விரும்புவர்கள், காளான்களை அடிக்கடி சேர்த்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இது குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இதனால், உங்களுக்கு நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் நிறைவாக இருக்கும். 

* காளான்களை உட்கொள்வது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் டி, புரதம், துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவை வயதுக்கு ஏற்ப எலும்புகள் வலுவிழக்காமல் தடுக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

* காளான்களில் பாலிசாக்கரைடுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகள் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

* சருமத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க காளான்கள் உதவும். இதனால், சருமம் மிகவும் பொலிவாகவும் கரும்புள்ளிகள் இன்றி அழகாகவும் இருக்கும்.

* காளான்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதன் காரணமாக அவற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிக்காது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of mushroom


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->