நன்னாரி வேரினை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!
Benefits of Nannari Health Tips
நன்னாரி வேர் சித்தமருத்துவத்தில் அதிகளவு பயன்படுகிறது. சிறுநீர் நன்றாக பிரியவும், வியர்வையை அதிகரித்து உடல் சூட்டை தணிக்கவும் நன்னாரி உதவி செய்கிறது. நன்னாரி வேர்ப்பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் மற்றும் கழிச்சல் பிரச்சனை சரியாகும்.
நன்னாரி வேரினை வாழையிலையில் கட்டி எரித்து சாம்பலாக மாற்றி, இதனுடன் சீரகம் மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் சரியாகும். நன்னாரி வேர் பொடியுடன் சமமான அளவு கொத்தமல்லி தூளினை சேர்த்து குடித்து வந்தால் மனக்கோளாறுகள் சரியாகும். வயிறு மற்றும் குடலில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும்.

நன்னாரி வேர்ப்பொடியுடன் கற்றாழையை சேர்த்து சாப்பிட்டால், விஷ கடியினால் ஏற்படும் பக்க விளைவுகள் நீங்கும். நன்னாரி வேர் பொடியுடன் அரை கிராம் வெண்ணெய் சேர்த்து சாப்பிட ஆரம்ப கால குஷ்டம் சரியாகும். தேனுடன் நன்னாரி வேர் பொடியை சேர்த்து சாப்பிட்டால் காமாலை சரியாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Nannari Health Tips