பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


வாழைப்பழங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்தினை கொடுப்பதிலும் சாப்பிடுவதற்கு மிகுந்த ருசியாக இருப்பதிலும் மிகவும் சிறந்தது.

அத்தகைய வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு. ஆனால் அவைகள் எந்த மாதிரியான உடல் பாதிப்புகளை குணமாக்குகிறது என்பது பற்றி நாமும் தெரிந்துகொள்வோம்

பூவன் பழம்

இந்த பழம் அளவில் மிகவும் சிறியவை. ஆனால் ஒரு வாழைக்குலையில் 100 முதல் 150 பழங்கள் இருக்கும். இந்த பழத்தை சாப்பிட்டால், மூலநோய்கள் குணமாகும்.

வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து  சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும்  குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும்.

மேலும், தோல் பளபளக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.
வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BENEFITS OF POOVAN BANANA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->