புதினாவில் இத்தனை நன்மைகளா? - இனி இதை ஒதுக்கிடாதீங்க.!
benefits of puthina
சமையலில் மணம் தரும் பொருட்களில் ஒன்று புதினா இலை. இந்த இலை வெறும் மணத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
* சமையலுக்கு பயன்படும் புதினா இலைகள் பசியை நன்றாக தூண்டக்கூடியது. உடலில் செரிமான மண்டலத்தை தூண்டி உணவை செரிக்கும் எண்சைம்களை அதிகம் சுரக்கச் செய்கிறது.
* வயிற்றில் வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் மற்றும் செரிமான கோளாறு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்குத் மருந்தாக பயன்படுகிறது.
* புதினா, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நெஞ்சில் ஏற்படும் எரிச்சலைப்போக்கவும், அவர்களை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. மூக்கடைப்பை சரிசெய்வதுடன் நாள்பட்ட இருமல் மற்றும் எரிச்சலைப் போக்குகிறது.
* வாயில் துர்நாற்றம் வீசக்கூடிய உணவை சாப்பிட்டுவிட்டால், அதனை போக்க புதினாவை மெல்லலாம். இதில் உள்ள உட்பொருட்கள், பற்களில் தங்கிவிடும் பிளேகை அகற்றுகிறது. இதனால் தான், பேஸ்ட் மற்றும் மவுத் வாஷ், சூயிங்கம்களில் புதினா பயன்படுத்தப்படுகிறது.
* மூளையின் திறனை அதிகரிக்க புதினா இலைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். இது நினைவாற்றலை அதிகரிப்பதுடன் மனஅழுத்தத்தை போக்குகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது.
* பாலூட்டும் தாய்மார்களுக்கு முளைக்காம்புகளில் ஏற்படும் வலியைக் குறைக்க புதினா பெரிதும் உதவுகிறது. காம்புகளில் ஏற்பட்ட வெடிப்புகளில் புதினா எண்ணெயை தடவினால், வலியைப் போக்கும்.
* புதினா இலைகள், உடல் எடையை குறைப்பதுடன், உடல் வளர்சிதையை அதிகரிக்க செய்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் புதினாவை உட்கொள்ளலாம்.