சத்துமிக்க சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.?
Benefits of sathukudi juice
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இனிப்பும், புளிப்பும் கலந்த சாத்துக்குடி ஜூஸில் நீர் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், நார்சத்து, கொழுப்பு, பொட்டாசியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளது.
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும் அல்சர் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் நல்ல தீர்வு கிடைத்தது.
குறிப்பாக சிறுநீர் தொற்று பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் தொற்று குணமாகும்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியின் காரணமாக உண்டாகும் உடல் நீர் இழப்பை ஈடுகட்ட சாத்துக்குடி ஜூஸ் பயன்படுகிறது. மேலும் இது கருவின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும்.
மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளின் வலுவிற்கும் தேவையான கால்சியம் சத்து சாத்துக்குடியில் நிறைந்துள்ளது.
வாய் துர்நாற்றம் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் நல்ல தீர்வை கொடுக்கிறது. மேலும் கண் தொற்று மற்றும் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.
சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடிப்பதால் கொலாஜன் உற்பத்திக்கு வழி வகுத்து சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
English Summary
Benefits of sathukudi juice