கசப்பு சுவைகொண்ட மருத்துவ மாமருந்து மூலிகை வேப்ப இலை.!
Benefits of Veppa ilai Neem Tree Leaves Health Tips
கசப்பு சுவை கொண்ட மூலிகையாக இருந்து வரும் வேப்பிலையை, சாதாரணமாகவே மென்று சாப்பிடலாம். வெயிலில் உலர்த்தி பொடியாக மாற்றிய பின்னர் நீரில் கலந்து குடிக்கலாம். வேப்பிலை நீரை கஷாயமாக பருகி வந்தால், வயிற்றில் இருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய புழுக்களான கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவற்றை இறக்கவைத்து மலத்தின் மூலமாக வெளியேற்றும்.
வயிற்றில் உள்ள குடல் உறிஞ்சிகளால் கசப்பு சுவை உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கிருமிகளை சிறுநீரின் வழியாக வெளியேற்ற உதவும். இரத்தத்தில் உள்ள கெட்ட கிருமிகள் அழிந்து, நமது இரத்தம் தூய்மை அடைகிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.
![](https://img.seithipunal.com/media/Neam.jpg)
சிறந்த கிருமி நாசினியாக இருந்து வரும் வேப்பிலையை அம்மை நோயை குணப்படுத்த உபயோகம் செய்வது நமக்கு நன்றாக தெரிந்த ஒன்று. வேப்பிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து பூசினால் அம்மை விரைவில் குணமாகும். அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
![](https://img.seithipunal.com/media/Neam%20a.jpg)
பற்களில் ஏற்படக்கூடிய பல்வலி, பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய வேப்பங்குச்சியை வைத்து பற்களை துலக்கலாம். தலையில் பொடுகு, பூச்சிக்கடி போன்ற பிரச்சனை சரியாக வேப்பிலை பொடியை நீர்விட்டு தலையில் தேய்த்து, இரண்டு மணிநேரம் கழித்து குளித்து வரலாம். சரும பிரச்சனைகளுக்கும், தோல் நோய்கள் சரியாகுவதற்கும், கால் விரல் பகுதியில் பெரும் சேற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் வேப்ப எண்ணெய் உதவி செய்யும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Veppa ilai Neem Tree Leaves Health Tips