கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் குடிக்க வேண்டிய 5 ஜூஸ்கள்.! மிஸ் பண்ணிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் அது அவர்களது உடல் நலத்திற்கு நன்மை பயப்புதோடு  அவர்களது வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் குடிக்க வேண்டிய ஐந்து ஜூஸ் வகைகளையும் அவற்றின் நன்மைகளையும் பார்ப்போம்.

 மாதுளை ஜூஸ்:
பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய மாதுளை பழ ஜூஸ் குடிப்பதால் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இவற்றிலிருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கருவின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவை தாய்க்கு வலிமையை தருவதோடு  கருவில் வளரும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவற்றின் ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

ஆப்பிள் ஜூஸ் :
கர்ப்ப காலங்களில் பெண்கள் கட்டாயம் குடிக்க வேண்டிய ஜூஸ்களில் ஒன்று ஆப்பிள் ஜூஸ். இது கர்ப்ப காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச் சத்து ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுகிறது. இது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

கேரட் ஜூஸ்:
கேரட் ஜூஸ் கர்ப்பமாகயிருக்கும் பெண்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொண்டுள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களுக்கு உயரத்த அழுத்தத்தினால் கர்ப்ப காலத்தில் ஏற்படும்  ப்ரீ எக்லாம்ப்சியா வராமல் தடுக்க உதவுகிறது. இவற்றிலிருக்கும் வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கருவில் இருக்கும் குழந்தையின் பற்கள் மற்றும்  எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ஆரஞ்சு ஜூஸ்:
ஆரஞ்சு ஜூஸ் சுவையாக இருப்பதோடு  கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. இது வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிடின் சிறந்த மூலமாகவும். இவை உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு கருவிலிருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வைக்கிறது.

பீட்ரூட் ஜூஸ்:
கர்ப்ப காலங்களில் பெண்கள் தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவதால்  அவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இவற்றிலிருக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ  உடலுக்கு சக்தியை தருவதோடு ரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது. மேலும் பீட்ரூட்டிலிருக்கும் நார்ச்சத்து கர்ப்ப காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை  தவிர்க்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Best 5 Juices for Pregnant Women


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->