சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும் பாதாம்.! எப்படி பயன்படுத்துவது.?!
Bhadham benefits
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதம் என்றால் பிடிக்கும் . தினமும் பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம் .
புத்துணர்வு தரும் :
பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு தேவையான ஊட்ட்சத்துக்கள் கிடைக்கும்., உடல் புத்துணர்வாக இருக்கவும் பாதாம் உதவும்.
இயற்கை மருத்துவத்தில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் எடை :
உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினம் பாதாம் சாப்பிட்டு வருவதன் மூலம் சீரான முறையில் உடலுக்கு தேவையான வலு கிடைக்கும். இதனால், உடலில் உள்ள தசைகள் பலம்பெறும்.
சர்க்கரை நோய் :
தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வருவதால் சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களை கட்டுபடுத்த உதவும் என ஆயூர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
இளமையான தோற்றத்திற்கு :
தோலில் உள்ள செல்களை செழுமைப்படுத்தி இளமையான தோற்றத்திற்கு பாதாம் சாப்பிட்டு வரலாம். பாதாம் சாப்பிடுவதால் சரும அழகு மேம்படும்.