பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை ஆதரிக்கவே  மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும் என்றும் அல்லது, அவர்கள் அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெறும் நிலை ஏற்படும் என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.மேலும் இந்த அமைப்பு சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக  புதிய கரன்சியை உருவாக்க முயற்சித்து வருவருவதாக கூறப்படுகிறது . 

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றபின் இதுபற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு கரன்சியை உருவாக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்தநிலையில் அதிபராக பதவியேற்ற பின் மீண்டும் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில்:-நாம் ஒதுங்கி நின்ற வேளையில், பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயற்சிப்பது தொடர்பான யோசனை முடிந்துவிட்டது என்றும்  இனி அந்த நாடுகள் ஒரு புதிய பிரிக்ஸ்  கரன்சியை உருவாக்கவோ அல்லது வலிமையான அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை ஆதரிக்கவோ மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும் என்றும் அல்லது, அவர்கள் அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெறும் நிலை ஏற்படும் என குறிப்பிடுள்ளார். 

மேலும் அவர்கள் இன்னொரு மோசமான நாட்டை தேடிச் செல்லலாம் என்றும்  சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்கும் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும்  அப்படி முயற்சிக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு விடை கொடுக்கவேண்டும் என அந்த பதிவில் இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump warns BRICS nations again


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->