மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்..பிரதமர் மோடி உறுதி ! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இதையொட்டி  2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் வளமும், வளர்ச்சியும் பெறவேண்டுமென நான் கடவுள் மகா லெட்சுமியை பிரார்த்திக்கிறேன் என்றும்  நாட்டின் ஏழைகள், நடுத்தர மக்களை கடவுள் மகா லெட்சுமி தொடர்ந்து ஆசிர்வதிக்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன் என கூறினார் . மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ,இந்தியா ஜனநாயக நாடாக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மிகவும் பெருமிதம் அளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும் உலக அரங்கில் இந்தியா தன்னை நன்கு நிலைநிறுத்திக்கொண்டுள்ளது என கூறிய பிரதமர் மோடி எனது 3வது ஆட்சி காலத்தில் இது முதல் முழுமையான பட்ஜெட் ஆகும் என்றும்  2047ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு செய்யும்போது இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும் என்றும்  அதற்காக தற்போதைய மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்' என்று அப்போது பிரதமர் மோடி கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Union Budget will give new impetus and confidence. Prime Minister Narendra Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->