கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.!  - Seithipunal
Seithipunal


கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் அதிகரிக்கும். 

இதில் மாங்கனிசு, தயமின், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை அதிக அளவில் உள்ளதால் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். 

கொண்டைக்கடலை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிக அளவில் புரோட்டின், இரும்பு சத்து உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் .

ஹார்மோன் ஏற்றத்தாழ்வை தடுக்கும். கொண்டக்கடலை சாப்பிடுவதால் பெண்கள் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து போராடும். 

ரத்த சோகை இருப்பவர்கள் கொண்டைக்கடலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். 

கொண்டைக்கடலையில் வேக வைத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிடுவதால் உடல் உறுதி பெறும். கொண்டைக்கடலை கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். 

வாத நோய், மூலநோய், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக்கடலை தவிர்ப்பது நல்லது. இதனை அதிக அளவில் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் அளவோடு பயன்படுத்துவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chana dal health benefits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->