செருப்படை மூலிகையின் மருத்துவ பயன்கள்.! இதோ உங்களுக்காக...  - Seithipunal
Seithipunal


செருப்படை மூலிகை வெப்பத்தன்மை கொண்டது. இந்த தாவரம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். சளியை முற்றிலும் குணப்படுத்தும். 

இந்த மூலிகை செடி தரையோடு படர்ந்து வளரும். சொரசொரப்பான இலைகளை கொண்டது. செருப்படை மூலிகை கார்ப்பு சுவையை கொண்டது. 

மலம், சிறுநீர் போன்றவற்றை பெருக்கும் தன்மை கொண்டது. இதன் இலைகள் நீள் வட்ட அல்லது முட்டை வடிவமானது. இலைகளின் மேல் மெழுகு பூசியது போன்ற அமைப்பில் இருக்கும். 

சிரங்கு கட்டுப்பட செருப்படை, வெங்காயச்சாறு போன்றவை கலந்து சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர நான்கு நாட்களில் சரியாகும்.

வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்த செருப்படை உதவுகிறது. முதலில் செருப்படை இலைகளை நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். 

இதனை மூன்று வேலை குடித்து வர சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற குணமடையும். இதில் தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம். 

நாவறச்சி, விக்கல் போண்டாவற்றை தீர்க்க செருப்படை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக சுட்டு சாம்பலை சம அளவாக எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coldenia procumbens health benefits in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->