ஒடிசா ரயில் விபத்து | தொலைக்காட்சி நேரலையின் மூலம் மகனை கண்டுபிடித்த பெற்றோர்கள்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. அந்த விபத்தின் போது காணாமல் போன மகனை, தொலைக்காட்சி நேரலையின் மூலம் பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கோரமண்டல ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இரயிலில் பயணம் செய்த நேபாளத்தை சேர்ந்த ராமானந்தா பஸ்வான் (வயது 18) குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவரின் பெற்றோர்கள் நேபாளத்தில் இருந்து ஒடிசாவுக்கு வந்து ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி அலைந்தனர்.

தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் ஒருவர், மகனை தேடி அலையும் பெற்றோர் குறித்த செய்தியை நேரலையாக ஒளிபரப்பு செய்தார்.

இதற்கிடையே, இரயில் விபத்தில் படுகாயமடைந்த ராமானந்தா பஸ்வான், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டிருந்தார் மருத்துவமனை வளாகத்தில் ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி நேரலையில் தனது தாய், தந்தை பேசுவதை பார்த்த ராமானந்தா, மருத்துவர்களிடம் தனது பெற்றோரை அடையாளம் காட்டினார்.

உடனே மருத்துவமனை நிர்வாகம், தனியார் தொலைக்காட்சி ஊழியரை தொடர்பு கொண்டது. அந்த ஊழியரின் உதவியின் மூலம் மகனுடன் பெற்றோர் இணைந்தனர்.

 

இதைப்பற்றி அவருடைய தாய் மீரா தேவி பேசும்போது, 

இரயில் விபத்து குறித்து அறிந்ததும் பதற்றத்தில் ஓடிசாவுக்கு விரைந்து வந்தோம். கண்ணுக்கு தெரிந்த அனைத்து மருத்துவமனையிலும் எங்கள் மகனை தேடி அலைந்தோம். காவல்துறை, மருத்துவமனை , உதவி மையங்கள் என அனைத்திலும் தொடர்பு கொண்டோம். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடைசியாக தொலைக்காட்சி ஊழியர் ஒருவரின் உதவியால் எனது மகனை கண்டுபிடித்து விட்டேன்" என்று மனம் உருகி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coramandal Train Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->