கண்ணீர் விட்டு அழுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா.?!
Crying benefits
நம் கண்களில் இருந்து வரும் கண்ணீரை ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள். இதில் முதல் இரண்டு வகை கண்ணீர்களும் நம் கண்களில் இருக்கும் அசுத்தம் மற்றும் அழுக்குகளை வெளியில் கொண்டு வருபவயாகும். இவை நம் கண்களுக்கு பாதுகாப்பாக அமைகின்றன.
கண்ணீரில் மூன்றாவது வகையான நம் உணர்ச்சிகளின் மேல் எழும்புதலால் வரும் கண்ணீரானது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், நம் உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் தாக்கத்தையும் குறைக்கும் முக்கிய காரணியாக பயன்படுகிறது.
நாம் அழும்போது வரும் கண்ணீரில் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோஜெனஸ் ஓபியாய்டுகளை வெளியிடுகின்றன. இது எண்டோர்பின்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் உடல் மற்றும் உணர்ச்சிகளின் வலியை எளிதாக்க உதவுகின்றன.
2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி கண்ணீரானது தூக்கத்தை அதிகரிக்கும் ஒரு காரணியாக இருக்கிறது. நம் அழுகையின் போது வரும் கண்ணீர் மனதில் இருக்கும் குறைகள் மற்றும் சோகங்களை போக்குவதன் மூலம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தூக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.