அதிக உப்பு சாப்பிடுவதால் உண்டாகும் நோய்கள் என்னென்ன?
disease of salt increase on food
சமையலில் தவிர்க்கமுடியாத ஒன்றாக உப்பு உள்ளது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். அதே சமயம் இந்த உப்பு சாப்பாட்டில் சிறிதளவு அதிகமாக போனாலும் நமக்கு பாதிப்பு ஏற்படும். அவை என்னென்ன என்பது குறித்து காண்போம்.
* அதிக உப்பு சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரித்து, ரத்த நாளங்களின் சுவர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது
* அதிகப்படியான உப்பு உட்கொள்வது உடலில் திரவத்தை தக்கவைத்து, அழற்சி அல்லது வீக்கத்துக்கு வழிவகுக்கும். அதிக தாகம் ஏற்படும். ஏகரணம், அதிகப்படியான சோடியத்தை நீர்த்துப்போக செய்வதற்காக உப்பு, உயிரணுக்களிலிருந்து தண்ணீரை வெளியேற்றி ரத்த ஓட்டத்தில் நுழைகிறது.
* சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வடிகட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதிக உப்பு சாப்பிடுவதால் காலப்போக்கில், இது சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
* அதிக உப்பை உட்கொள்வது நீரிழப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் மாற்றங்களுக்கு பங்களிக்கும். இது சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும்.
English Summary
disease of salt increase on food