கரப்பான் பூச்சியை போல தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து! பயணிகளின் உயிரில் விளையாடிய ஓட்டுனருக்கு ஆப்பு!
Salem Bus Accident
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்படவில்லை என்று தமிழக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்தின் ஓட்டுனர் செல்போன் பேசியபடி பேருந்து இயக்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த அதன் செய்தி குறிப்பில், "சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இந்த விபத்து நடந்த இடத்தை சேலம் கோட்ட அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் ஓட்டுனர் அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது, பேருந்தின் நடத்துனரும் இதை உறுதி செய்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுனர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேருந்தின் பிரேக் நல்ல நிலையில் வேலை செய்வதும் அலுவலர்களால் உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.