ஃப்ரிட்ஜில் முட்டையை வைத்தால் இவ்வளவு ஆபத்தா.? உஷார்.!
do not put egg in fridge
முட்டையில் கால்சியம், புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் நிரம்பிள்ளன. ஆனால், இதை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அந்த ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அறை வெப்ப நிலையில் வைத்து பராமரிப்பதை விட ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகள் விரைவில் கேட்டுப் போய்விடுமாம்.
மேலும், அது பால் போல திரிந்தும் விடும் என்று கூறுகிறார்கள். குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்த பின் அதை எடுத்து அதை வெப்ப நிலைக்கு கொண்டு வரும்போது வெப்பநிலை மாறுபாட்டினால் முட்டையின் ஓட்டில் இருக்கும் சிறு துளைகள் வழியாக பாக்டீரியா வேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளே செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையெனில் அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைப்பதால் முட்டையின் இயற்கை சுவை மாறுபடுகிறது.
முட்டையில் இருக்கும் சத்துக்கள் அழிந்து விடும். முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் எதுவும் நமது உடலுக்கு கிடைக்காது என்பதை தாண்டி இது உடல் பாதிப்பையும் ஏற்படுத்த கூடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.