மழைக்காலத்தில் அலர்ஜி பிரச்சினை தடுக்க இத பண்ணுங்க!
Do this to prevent allergy problems in the rainy season
மழைக்காலத்தில் அலர்ஜி பிரச்சினைகளை தடுக்க உணவில் சேர்க்க வேண்டிய சிறப்பான உணவுப்பொருட்களை இங்கே பார்க்கலாம்:
1. மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்மின் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்திகள் அலர்ஜியை தடுக்க உதவுகின்றன. இரவில் பாலில் மஞ்சள் சேர்த்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. பூண்டு: பூண்டின் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசத் தொற்றுக்களை குறைக்கவும் உதவுகிறது. மழைக்காலத்தில் சமைக்கும் உணவில் பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள்.
3. இஞ்சி: இஞ்சியில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் மழைக்கால அலர்ஜி பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. பச்சை காய்கறிகள்: கீரை, ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
5. உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்: பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற உலர் பழங்களில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி, தொற்று நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
இந்த உணவுப்பொருட்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்து, மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருங்கள்.
English Summary
Do this to prevent allergy problems in the rainy season