ரயில் டிக்கெட் CONFIRM ஆக இத பண்ணுங்க - இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறை! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முக்கிய நகரங்களாக விளங்கும் தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் வசிக்கும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும் போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பர்.

இதனை தவிர்க்கும் விதமாக பயணிகள் முன் கூட்டியே தங்கள் பயணச் சீட்டுகளை பதிவு செய்து கொள்வர். இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாகக் குறைக்கப்பட்டு உள்ளதாக, இந்திய ரெயில்வே கடந்த மாதம் அறிவித்தது.

அதன்படி, இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக அமலுக்கு வந்துள்ளது. இருந்த போதிலும், வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் முன்பதிவுக் காலம் என்ற அளவில் மாற்றம் எதுவும் இல்லை என்று, இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரயில் முன்பதிவு காலம் முன்னதாக 120 நாட்களாக இருந்த நிலையில் 60 நாட்களாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த டிக்கெட்டுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும்,  முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் அனைத்தும் செல்லும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do this as a train ticket confirm new rule effective from today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->