பிரதமர் மோடியின் முக்கியப் புள்ளி காலமானார்!...பாஜகவிற்கு அடுத்தடுத்து வரும் சோதனை!
Prime minister modi main point has passed away next test for bjp
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசாராக பிபேக் டெப்ராய் செயல்பட்டு வந்தார். இவர் குடல் சம்மந்தமான நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை இவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பிபேக் டெப்ராயின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிபேக் டெப்ராய் ஜி ஒரு உயர்ந்த அறிஞராகவும், பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் மற்றும் பல துறைகளில் நன்கு அறிந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிபேக் டெப்ராயின் படைப்புகள் மூலம், அவர் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார். பொதுக் கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்கள் அணுகும் வகையில் வேலை செய்வதில் அவர் மகிழ்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிபேக் டெப்ராய் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime minister modi main point has passed away next test for bjp