நல்லநாள் அதுவுமா, திமுக அரசை போட்டுத்தாக்கிய அண்ணாமலை! லண்டனில் இருந்து பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாள் இன்று (01.11.1956), கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இன்று அதனதன் பிறந்த நாளை கொண்டாடுகின்றன. 

ஆனால், 'தமிழ்நாடு தினம்' எந்த நாள் என்பதில் இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுகவின் அரசியல் காரணமாக (அதிமுக ஆட்சிக்காலத்தில் நவ.1 ஆம் தேதி தமிழ்நாடு தினம், திமுக ஆட்சியில் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது) தமிழருக்கென ஒரு மாநிலம் என உருவான நாளை கொண்டாடுவதில் பாவப்பட்ட மக்கள் தான் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழநாடு பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, உறுதியேற்போம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai DMK MKStalin Govt Tamilnadu Day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->