கருணை கிழங்கு சாப்பிட்டால் என்ன ஆகும்?.! சிறிய பிரச்சனையில் இருந்து புற்றுநோய் பிரச்சனை வரை ஒரே தீர்வு.!!  - Seithipunal
Seithipunal


நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க தினமும் ஒரு ஒரு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். அந்த வகையில்., கிழங்கு வகைகளுள் ஒன்றாக இருக்கும் கருணை கிழங்கை பற்றி இனி காண்போம். 

வாரத்திற்கு ஒரு முறை கருணை கிழங்கை சாப்பிட்டாலே உடலில் உள்ள பாதி நோய் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். கருணை கிழங்கில் வைட்டமின் சி., வைட்டமின் பி., மக்னீசு., மினரல்., ரிபோபிளேவின்., பொட்டாசியம்., இரும்பு சத்துக்கள் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்களின் மூலமாக நமது குடல் சுத்தம் செய்யப்படுவதோடு உடல் எடையும் குறைக்கப்பட்டு., மூல நோயை தடுக்கிறது. 

karunai kilangu, karunai kilangu kulambu,

Tamil online news Today News in Tamil

இது மட்டுமல்லாது உடலில் இருக்கும் நோய்களை குணப்படுத்தி., ஜீரண மண்டலத்தை சிறப்புடன் செயல்பட உதவுகிறது. உடலின் சக்தியை அதிகரித்து, உடலின் உறுப்புகளுக்கும் நல்ல பலத்தை தருகிறது. வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்கவும்., மூலச்சூடு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காக்கிறது. இதுமட்டுமல்லாது நாள்பட்ட நோய்களில் இருந்து நமக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது. 

karunai kilangu, karunai kilangu kulambu,

உடலின் ஜீரண சக்தியை அதிகளவு அதிகரித்து., கல்லீரல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இதன் மூலமாக உடலில் தேங்கும் கொழுப்புகள் தடுக்கப்பட்டு., உடல் எடையானது குறைகிறது. மேலும்., பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாவும்., பித்த கற்கள் பிரச்சனை சரியாகவும் உதவி செய்கிறது. வயிறில் இருக்கும் அமில சுரப்பை சீராக்கி., பசியின்மை பிரச்சனையை சரி செய்கிறது. 

Tamil online news Today News in Tamil

இது மட்டுமல்லாது இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகி இதயம் ஆரோக்கியம் பெறவும்., மாரடைப்பு மற்றும் இரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்து நீண்ட ஆயுட்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதனைப்போன்று வயிறு புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do you eat karunai kilangu to avoid cancer problem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->