டெல்லியில் பா.ஜ., வெற்றி பெற்றால் குடிசைகள் அகற்றப்படாது பிரதமர் மோடி உறுதி..! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் டில்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆர்.கே.புரம் பகுதியில்பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். 

இதன் போது அவர் பேசியதாவது:- பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது. பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இணைந்து செயல்படுவோம். எந்தவொரு பயனுள்ள திட்டங்களையும் ரத்து செய்ய மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது. இந்த அறிவிப்பை வெற்று பேச்சுக்காக அறிவிக்கவில்லை. ஆனால், ஆம்ஆத்மி குடிசை விவகாரத்தில் பொய் தகவலை பரப்புகின்றனர் என்று தெரிவித்த்துளார்.

மேலும், பூர்வாஞ்சலி மற்றும் பிஹாரி சமூக மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஏனெனில், நான் பூர்வாஞ்சல் தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளேன். கோவிட் சமயத்தில் சில கட்சிகள் அவர்களை மோசமாக நடத்தினார்கள். டில்லியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். ஆனால், பா.ஜ., எப்போதும், பூர்வாஞ்சல் மற்றும் பிஹார் மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.

பிஹாரில் உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காக மஹானா போர்டு உருவாக்கப்பட்டது. மஹானா சாகுபடியில் தலித் குடும்பத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். எப்போது எல்லாம் தலித் மக்களுக்கான நலத்திட்டங்களை நான் அறிவிக்கிறனோ, அப்போது எல்லாம், எதிர்க்கட்சிகள் என்னை கேலி செய்கின்றனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi assures that if BJP wins in Delhi the slums will not be demolished


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->