மேலும் 6 இடங்களில் 'தோழி' மகளிர் விடுதி: தமிழக அரசு முக்கிய தகவல்!
Tamil Nadu govt to set up thozhi women s hostel in 6 more places
தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகளை கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.ரூ.70 கோடி செலவில் தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பெண்கள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில் அவ்வாறு வரும் பெண்கள் பெரும்பாலும் தனியார் பெண்கள் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டி உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தோழி மகளிர் விடுதிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழக அரசு தோழி மகளிர் விடுதி என்ற உணவு, உறைவிட விடுதி வசதியை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து சென்னையில் தொடங்கப்பட்ட இந்த விடுதிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இது பெண்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
இந்நிலையில் புதிதாக மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதி அமைக்க ரூ.70 கோடி செலவில் தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது என்றும் இதில் 950 பேர் தங்கும் வகையில் 2 விடுதிகள் சென்னையிலும், 4 விடுதிகள் ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலும் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Tamil Nadu govt to set up thozhi women s hostel in 6 more places