மத்திய பட்ஜெட் கானல் நீர் பட்ஜெட்..அதிமுக விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபி கட்சியின் கூட்டணி அரசு புதுச்சேரியில் இருந்தாலும் நம் மாநிலம் முழுமையாக புறக்கணிக்கபட்டுள்ளது என்றும் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் கானல் நீர் பட்ஜெட்டாக உள்ளது என  புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவிக்கையில்:வருமான வரி உச்சவரம்பு 12 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளதால் நடுத்தர மக்கள் பயணடைவார்கள்.இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு எந்தவிததிட்ட அறிவிப்பும் இல்லை.
சுற்றுலாவை நம்பி உள்ள நம் மாநிலத்திற்கு விமானநிலைய விரிவாக்கம்திட்டம் இல்லை.
சென்னையில் இருந்து இசிஆர் சாலை வழியாகவும், புதுச்சேரி- கடலூர், புதுச்சேரி - திண்டிவனம் ரயில் பாதைக்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.

மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபி கட்சியின் கூட்டணி அரசு புதுச்சேரியில் இருந்தாலும் நம் மாநிலம் முழுமையாக புறக்கணிக்கபட்டுள்ளது.நடைபெற இருக்கும் பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தலில் பிஜேபி வெற்றி பெறுவதற்கு இந்த பட்ஜெட்டை மத்திய அரசு பயன்படுத்திள்ளதாக தெரிகிறது. அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதவேண்டிய மத்திய அரசு அதிலிருந்து விலகி இருப்பது தவறானதாகும் என  அதிமுக மாநில செயலாளர்அன்பழகன் தெரிவித்துள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Budget is a mirage budget. AIADMK Review


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->