இலந்தை பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திறந்த வெளி பகுதிகள் மற்றும் ஏரிக்கரை ஓரத்தில் இந்த இலந்த மரத்தின் பழங்களை சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பிறக்கிக்கொண்டு உண்ட காலமும் இருக்கிறது. 

இன்று இருக்கும் 90 கிட்ஸ் பத்து மற்றும் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் நேரத்தில், சில நேரங்களில் பள்ளிக்கூடங்களை கட் அடித்துவிட்டு வேப்ப மரத்தின் அடியில் படுத்து கொண்டு இருந்த பழங்களை கொண்டுவந்து நண்பர்களாக உண்டு சிறிது மகிழ்ந்த காலம் இருக்கிறது.

இந்த செய்தி குறித்து முழு வீடியோ பதிவு: 

இலந்த பழத்தின் பூர்வீகம் சீனா என்றாலும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்துவிட்டது. இலந்த மரத்தின் இலை மற்றும் பட்டை போன்ற பொருட்கள் மருந்துப் பொருளாக பயன்படுகிறது. 

இலந்த பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள் உள்ளன. இந்த பழத்தில் இரும்பு சத்து, தாமிர சத்து, கால்சியச் சத்து, பொட்டாசியம் சத்து, மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்பு சத்துக்களும், கார்போஹைட்ரேட்டுகளும் புரதங்களும் இருக்கிறது. 

இரவில் தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலானோர் தூக்கம் இல்லாமல் இருந்து வருகின்றனர், இரவில் தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கு இந்த பழமானது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதனை சாப்பிட்டால் மன அமைதி ஏற்பட்டு ஆழ்ந்த உறக்கம் வரும் என்பது இதனை சாப்பிட்டு உறங்கியவர்களுக்கு  தெரியும்.

ilanthai palam, elanthai palam, ilanthai fruit, elanthai fruit, இலந்தை பழம்,

இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து, ரத்த ஓட்டம் இயக்கப்பட்டு, எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் ஏற்படும் புற்று நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலமாக நோய் தடுப்பாற்றல் அதிகரித்து உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.

பேருந்துகளில் செல்லும் பலருக்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிடுவதால் மூலம் உடல்வலி, வாந்தி தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் குறையும். 

பெண்களுக்கு பெரும்பாலும் மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் மருந்தாகவும் இந்த இலந்தைப் பழம் பயன்படுகிறது. நமது உடலுக்கு நன்மை தருகிறது என்று கூறிவிட்டு அளவுக்கு அதிகமாகவும் எதையும் சாப்பிட கூடாது, இந்த பழத்தை அதிகமாக உண்ணுவதால் சர்க்கரை அளவு திடீரென மாறுபடும்.

Tamil online news Today News in Tamil 

Subscribe - Seithipunal Youtube 
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eat ilanthai fruit for health body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->