திண்டுக்கல்: அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றும்போது டெட்டனேட்டர் வெடித்து 2 பேர் காயம்..!!
Two injured after detonator explodes while retrieving decomposed body
திண்டுக்கல் சிறுமலையில் இறந்து கிடந்தவர் நக்சல் அமைப்பை சேர்ந்தவரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரது உடலை கைப்பற்றும் போது டெட்டனேட்டர் வெடித்து இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பகுதியில் 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அங்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து அவ்வழியாக செல்லும் மக்கள் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையறிந்து திண்டுக்கல் போலீசார் அப்பகுதியில் சென்றபோது உடல் அருகே டெட்டனேட்டர்கள் மற்றும் வயர்கள் கிடந்ததை பார்த்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், க்யூபிரிவு போலீசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையின் போது உடல் அருகே கிடந்த டேட்டனேட்டர்கள் வெடித்து இரண்டு போலீசார் காயமடைந்தனர். பின்னர் இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து விசாரித்ததில், இறந்தவர் கேரளா இடுக்கி பகுதியை சேர்ந்த சாபு என்பது தெரியவந்தது.
இவர் எதற்கு சிறுமலை பகுதிக்கு டெட்டனேட்டர்களை கொண்டு வந்தார்? டெட்டனேட்டர் வெடித்தது உயிரிழந்தாரா? நக்சல் அமைப்பை சேர்ந்தவரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் திண்டுக்கல் எஸ்.பி கூறுவதாவது, 'இறந்தவர் குறித்து விவரம் தெரியவந்துள்ளது. அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் ' என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
Two injured after detonator explodes while retrieving decomposed body