சென்னை: மது போதையில் போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது!
Three people involved argument while drunk attacked police officers patrol
சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையம் போலீசார் கடந்த 26ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை மது போதையில் தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை டி.எச் ரோடு மற்றும் ரத்தின சபாபதி தெரு சந்திப்பில், வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கி போலீசார் விசாரித்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த குறுக்குப்பேட்டை சேர்ந்த கோதண்டராமன் மீது சந்தேகத்தின் பெயரில், மது போதை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்தனர். அப்போது கோதண்டராமன் மது அருந்திருப்பது தெரியவந்தது.

பின்னர் அவருக்கு அபராதம் விதித்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அப்பொழுது கோதண்டராமன் உட்பட மது போதையில் இருந்த மூவரும், உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று போலீசாரிடமும் தகராறில் ஈடுபட்டு, பின்பு தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கோதண்டராமன், கண்ணன் மற்றும் கலைமணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Three people involved argument while drunk attacked police officers patrol