டிப்பர் லாரி மோதி நிகழ்விடத்திலேயே 5 பேர் பலி.! கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்!
Tipper truck collision 5 people died on the spot
கர்நாடகாவில் கோவிலுக்கு சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில், ஐந்து பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கொல்லேகல் தாலுகாவில் சிக்கிந்துவாடி அருகே கார் மீது டிப்பர் லாட்டரி மோதி, கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் பயணம் செய்த பெண்கள் உட்பட ஐந்து பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் காரில் பயணம் செய்த 5 பேரும் மாண்டியாவை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கொல்லேகல் வழியாக மாதேஸ்வரர் மலைக்கு சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தினால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் போலீசார் டிப்பர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
Tipper truck collision 5 people died on the spot