முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்.. முட்டை பற்றிய அரிய தகவல்கள்.!
Egg Eat conditions
பழங்காலத்திலிருந்தே முட்டை ஒரு முக்கிய உணவாக இருந்து வருகின்றன, மேலும் அவை நம் உணவுகளில் தொடர்ந்து இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது.
முட்டையானது மிகவும் எளிமையான மற்றும் அரிய சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருப்பது மட்டுமல்லாமல் குறைவான விலையில் கிடைப்பதால் ஏழை எளிய மக்களும் இதனை உண்டு பயன்படும் வகையில் இருக்கிறது.
ஒரு முட்டையில் வைட்டமின் ஏ,ஃபோலேட்,வைட்டமின் பி5,வைட்டமின் பி12,வைட்டமின் B2,பாஸ்பரஸ்,செலினியம் ஆகிய சத்துக்கள் உள்ளன .
இதைத் தவிர்த்து, முட்டையில் சூரிய ஒளியில் கிடைக்கக்கூடிய வைட்டமின் டி இருக்கிறது, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் உள்ளன.
முட்டையை பொரித்து அல்லது குழம்பாக உட்கொள்ளும் போது அதில் சேர்க்கக்கூடிய மூலப் பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் காரணமாக அதனுடைய கலோரி அளவு கூடி நம் உடலில் கொழுப்பாக தேங்கி விடுகிறது. இதனால் முட்டையை வேகவைத்து சாப்பிடுவது சிறந்த வழியாகும்.