உணவில் 'சோம்பு' சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.!
Fennel seeds health benefits in tamil
* உணவில் சோம்பு சேர்த்துக் கொள்வதால் பல சுகாதார நன்மைகள் கிடைக்கிறது. சோம்பில் அதிக அளவிலான புரதச்சத்து உள்ளதால் அல்சீமர் நோய் மற்றும் மூளை நோய்களின் அபாயத்தை குறைக்கும். சோம்பில் அதிக அளவிலான கால்சியம், மெக்னீசியம் உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
* இது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் எலும்பு நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. சோம்பில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளதால் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் சருமங்களை மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.
* சோம்பில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்த்ன் என்ற பொருட்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் கண்களுக்கான தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. கண் புரை, மாகுலர் சிதைவு போன்றவற்றை குறைக்கும்.
* சோம்பில் வைட்டமின் சி, துத்தநாகம் அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று நோய் அபாயத்தை குறைக்க உதவும். சோம்பில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் மலச்சிக்கலை தடுக்கவும், குடல் பாக்டீரியாவின் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
* சோம்பில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் ரத்த செல்களுக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சோர்வு மற்றும் சுறுசுறுப்பின்மையை தடுக்கும். சோம்பில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளதால் மன அழுத்தத்தை குறைக்கும். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
English Summary
Fennel seeds health benefits in tamil