இந்த மீன்களை எல்லாம் சாப்பிட்டா அவ்வளவு தான்.. உஷார் மக்களே.!
fishes to avoid eating frequently
மீன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. மீன்களை அதிகமாக நம் உணவில் எடுத்துக் கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான ஒமேகா 3 வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்களும் புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகளும் நம் உடலுக்கு கிடைக்கின்றன.
ஆனால் சில மீன்களில் பிசிபி என்ற பாதரசத் தன்மை கொண்ட விசுப்பொருள் அதிகமாக இருக்கிறது. இந்த மீன்களை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிப்பதோடு ஞாபகத் தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் வரலாம். எந்தெந்த மீன்களில் நச்சுப்பொருள் அதிகமாக இருக்கிறது? எந்த மீன்களை எவ்வாறு சாப்பிடலாம் என பார்ப்போம்.
சுறா மீன்கள் அதிகமான அளவு பாதரசம் தன்மையை கொண்டுள்ளன. இவற்றை நம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல் மாதம் ஒருமுறை அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளலாம். இந்த சுறா மீன்களில் 0.979 பிபிஎம் அளவில் பாதரசம் சராசரியாக உள்ளது. மேலும் இந்த அளவு 4.54 பிபிஎம் அளவு வரை அதிகரிக்கும். இதன் காரணமாக இந்த மீனை அடிக்கடி நம் உணவில் எடுத்துக் கொள்ளும் போது நச்சுத்தன்மையின் அளவு உடலில் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக சுறா மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சூறை மீன் பாதரசம் அதிக அளவில் கொண்ட மற்றொரு மீனாகும் இதில் இருக்கும் அதிக அளவிலான பாதரசம் நம் மூளையின் செல்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துக்கூடும். இதன் காரணமாக இந்த மீன்களை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவையான வாலை மீனிலும் பாதரசம் அதிக அளவில் இருக்கிறது. வாலை மீனில் 9.76 பிபிஎம் அளவிற்கு பாதரசம் உள்ளது. இந்த மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நம் உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் கேடு விளைவிக்க கூடிய ஒன்று.
விலாங்கு மீன் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மற்றொரு மீன் வகையாகும். சுவையான இந்த மீனில் உடலுக்கு தீங்கி விளைவிக்க கூடிய பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. எனவே இந்த மீன்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு தீமை பயக்கும்.
மீன்களை நிறைய சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதை போல தொடர்ந்து மீன்களை அதிக அளவில் சாப்பிட்டு வருவதால் ஏராளமான தீமைகளும் ஏற்படுகின்றன. சில மீன்களில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை அவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது நமது மூளை மற்றும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்குகின்றன. சில மீன்கள் செரிமான தன்மையை பாதிப்பதோடு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒரு காரணியாகவும் இருக்கிறது. எனவே, உஷார்.
English Summary
fishes to avoid eating frequently