மாரடைப்பை போக்கும் 5 வகை மீன்கள் - என்னென்ன தெரியுமா?
five fish clear heart attack
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு வருகிறது. இதனை உணவு மூலம் எப்படி சரிசெய்யலாம்? அதிலும் குறிப்பாக மீன்கள் மூலம் எப்படி சரி செய்யலாம்? அவை எந்தெந்தெந்த மீன்கள் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* சூரை மீன்
சூரை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது, ரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைத்து மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
* கானாங்கெளுத்தி மீன்
இந்த மீனிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. உலக அளவில் முக்கியமான மீனாக கருதப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்புக்கு எதிரியாக விளங்குகிறது.
* இறையன் மீன்
இறையன் மீன் எனப்படும் டிரவுட் மீனிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது.
* வெங்கணா மீன்
வெங்கணை அல்லது வெங்கணா எனப்படும் ஹெர்ரிங் மீனில் ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் இரண்டு வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
* மத்தி மீன்
மற்ற மீன்களை விட மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும், இரும்புச் சத்து, செலினியம் போன்ற தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. இந்த மீனை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, ரத்த சர்க்கரை அளவும் குறையும்.
English Summary
five fish clear heart attack