'அனைத்தும் சாத்தியம்' என்று மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியம்! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறந்து வைக்கபட்டது.இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,"சமூகத்தின் விளிம்பில் இருப்போருக்கும் சமவாய்ப்பளித்து, மையநீரோட்டத்தில் இணைத்துக் கரம் கோத்துப் பயணிப்பதுதான் ஒரு முற்போக்கான முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்!

அவ்வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மெரினாவில் நான் திறந்து வைத்த #அனைத்தும்_சாத்தியம் (Museum of Possibilities) அருங்காட்சியகம் பெயருக்கேற்ற வகையில், மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையமாக வெற்றியடைந்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தற்போது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Everything is possible says museum for the differently abled Chief Minister M K Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->