டீயில் நெய் கலந்து குடித்தால் என்ன நடக்கும்? வாங்க பார்க்கலாம்.!
ghee tea benefits
தினமும் காலை, மாலை என்று இருவேளைகளிலும் டீ குடிப்பதை பொதுமக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த டீயிலும் பல வகைகள் உள்ளது. கிரீன் டீ, மசாலா டீ, இஞ்சி டீ என்று பல வகைகள் உள்ளன. இந்த நிலையில், டீயில் நெய் சேர்த்து குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* பொதுவாக டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது. இது மூளையை தூண்டுவதுடன் நினைவாற்றலை பலப்படுத்துகிறது.
* காலை தேநீரில் நெய் கலந்து குடித்தால் எரிச்சல் நீங்கி மனதை அமைதிப்படுத்துவதுடன், தேவையற்ற பதற்றத்தை குறைக்கிறது. இந்த நெய் டீயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.
* இந்த டீயில் கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதைக் குடிப்பதால், சோம்பல், பலவீனம், சோர்வு உள்ளிட்டவை நீங்கும்.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது பருவகால நோய்களுக்கு எதிராக உடலைத் தயார்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த நெய் டீயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்காமல் தடுக்கிறது.