உணவே மருந்து - வீட்டு வைத்தியத்தில் தனி இடம் பெறும் 'ஏலக்காய்' - குழந்தை பெற்ற இளம் தாய்மார்களுக்கு அருமருந்து..!! - Seithipunal
Seithipunal



எல்லோருடைய வீட்டிலும் எப்போதும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் ஒரு வாசனைப் பொருள் தான் ஏலக்காய். இதை இனிப்பு வகைகளை தயாரிக்கும் போது வாசனைக்காக சேர்ப்பார்கள். ஆனால் இது வெறும் வாசனைப் பொருள் மட்டுமல்ல. இதில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் என்று ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. 

ரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் கல்லீரலில் தேங்கியுள்ள அதிகப்படியான யூரியா, கால்சியம் உள்ளிட்ட பல்வேறு நச்சுக்களை வெளியேற்றும். 


குழந்தை பெற்ற இளம் தாய்மார்களுக்கு இந்த ஏலக்காய் ஒரு அருமருந்தாகும். டீயில் ஏலக்காய் தட்டிப் போட்டு அருந்தி வந்தால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுவதோடு, சளி மற்றும் காய்ச்சலையும் குணமாக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் மன அழுத்தத்திற்கான சிறந்த மருந்தாக ஏலக்காய் பரிந்துரைக்கப்படுகிறது. 

ஏலக்காய்த்தூளுடன் தேன் கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் நன்கு பலம் பெறும். மேலும் ஏலக்காய்த்தூளுடன் சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் கருப்பட்டி கலந்து ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் ஏற்படும் மயக்கம் குணமாகும். 

ஏலக்காய், மிளகு, திப்பிலி, சுக்கு, மல்லி இவை அனைத்தையும் போட்டு கஷாயம் செய்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும். வெற்றிலையுடன் ஏலக்காய்த்தூள் கலந்து மென்று தின்று வர, அஜீரணம் நீங்கி, நன்றாக பசிக்கும். மேலும் ஏலக்காய்த்தூளுடன் சிறிது மிளகுத்தூள் மட்டும் துளசி சாறு கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட கபம் இளகி வெளியேறும். 

ஏலக்காய் விதைகளை வெறும் வாயில் போட்டு அதக்கி, உமிழ்நீரை மட்டும் விழுங்கினாலே வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, வாய்ப்புண்ணும் குணமாகும். மேலும் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல், தலைவலி, நீர்க்கடுப்பு, செரிமானப் பிரச்சினை என்று பல பிரச்சினைகளுக்கும் ஏலக்காய் அருமருந்தாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Benefits Of Cardamom


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->