சூர்ய ஒளியின் வைட்டமின் மஸ்ரூமில் இருக்கா? அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


நாம் உணவிற்காக பயன்படுத்தக்கூடிய காளான்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும்  நன்மைகள் அடங்கியிருக்கின்றன  காளான்களிடம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம்  அவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு  இன்றியமையாத  ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

காளான்களில் வைட்டமின் டி சத்து அதிகமாக காணப்படுகிறது. இது சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய புற ஊதா கதிர்களை விட்டமின் டி யாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்கிறது. காளான்  தாவர உணவின் மூலம் விட்டமின் டி கிடைக்க கூடிய ஒரு சிறந்த உணவு பொருளாகும்.

காளானில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய வைட்டமின் பி  பீட்டா குளுகன் மற்றும்  செலினியம் போன்ற மூலக்கூறுகள் நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கின்றன.

புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைப்பதில் காளான்கள் பெரும் பங்கு வைக்கின்றன. 1966 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை நடத்தப்பட்ட கேன்சர் தொடர்பான 17 ஆய்வுகளின் அடிப்படையில்  ஒரு நாளைக்கு 18 கிராம்  காளான் சாப்பிடுபவர்களுக்கு  புற்றுநோய் தாக்கும் ஆபத்து குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காளான்களில் இருக்கும். எர்கோதியோனைன் என்ற வேதிப்பொருள் நம் உடலுக்கு கேன்சர் தாக்குவதை தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.

காளான்களில் குறைந்த அளவே சோடியம் உள்ளது மேலும் காளான்களின் சுவையின் காரணமாக அவற்றில் அதிகமான உப்பு சேர்க்க வேண்டிய தேவையும் இருக்காது. இதனால் இவை உடலின்  இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பயன்படுகிறது .

காளான்கள் சில நேரங்களில் மருந்தாக மட்டுமே பயன்படுகின்றன. வாரத்தில்  இரண்டு நாட்கள் காளான்களை உணவில் சேர்த்துக் கொள்வோர்களுக்கு 
லேசான அறிவாற்றல் குறைபாடு, ஞாபக மறதி, மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் தாக்கக்கூடிய அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of mushroom


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->