காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய நான்கு ஆரோக்கிய பானங்கள் எவை எவை தெரியுமா..?! - Seithipunal
Seithipunal



காலையில் எழுந்தவுடன் நாம் குடிக்கும் பானங்கள் தான் நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சற்று வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் நமது உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். மேலும் உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, நமது சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

வெந்நீரோடு வேறு சில ஆரோக்கிய பானங்களையும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அவை என்னென்ன பானங்கள் என்று இந்தப் பதிவில் பாப்போம். 

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த நீர்:

எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து, அத்துடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் எடையை பெருமளவு குறைக்கிறது. மேலும் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதம் கிடைப்பதோடு சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

பீட்ரூட், கேரட் அல்லது மாதுளை ஜூஸ்:

தினமும் காலையில் பீட்ரூட், கேரட் அல்லது மாதுளை அல்லது வேறு ஏதேனும் ஒரு ஆரோக்கியமான ஜூஸை அருந்தலாம். இதில் உள்ள சத்துக்கள் முகப்பருவை தடுப்பதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகின்றன. 

க்ரீன் டீ : 

தினமும் காலையில் கிரீன் டீயில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரலாம். இதுவும் முகப்பருவை நீக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

மஞ்சள் பால் :

தினமும் காலையில் பாலில் சிறிது மஞ்சள் கலந்து குடித்து வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருப்பதோடு, இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை குணமாக்கி சருமப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Drinks Should Drink in Empty Stomach in Morning for Glowing Skin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->