நாளை சம்பவம் உறுதி: CM ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த தலைமைச் செயலாக ஊழியர்கள்!
TN Govt Pension Scheme Protest
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்தது.
மேலும், மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரை செய்ய குழு அமைத்ததற்கு தமிழக அரசின் தலைமைச் செயலாக ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, நாளை தமிழக அரசின் தலைமைச் செயலாக ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
English Summary
TN Govt Pension Scheme Protest