தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: சீமான் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!
TN Caste Census NTK Seeman
சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வருகின்ற 01-03-2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பேரணி தொடங்கும் இடம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் இடம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.
பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் இம்மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனவும் அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
TN Caste Census NTK Seeman