தூக்கத்தை தொலைத்துவிட்டீர்களா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க.!
ho to make seemai samanthi tea
மனிதனின் வாழ்க்கையில் தூக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் சராசரியாக ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், வேலை டென்ஷன், மன உளைச்சல், செல்போன் பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால், தூக்கம் வீண் போகிறது.
அப்படி இருக்கும் போது அவரது உடல், பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறது. அதிலும் பெரும்பாலானவர்கள் தூக்கமின்மையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்வதற்கு இயற்கை மருத்துவத்தில் எளிய வழி உள்ளது.
அதாவது, சீமை சாமந்தி பூவினை தேனீராக பருகி வந்தால் மன அமைதி ஏற்பட்டு நல்ல தூக்கம் கிடைக்கும் என ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் மனதை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது. மேலும், நம் உடலில் இருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோலை ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் மன நிம்மதி அடைந்து நல்ல தூக்கமும் கிடைக்கிறது.
இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில், சீமை சாமந்தி பூவை உலர வைத்து கொதிக்கும் நீரில் போட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி அவற்றுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும். இந்த நீரை உறங்கச் செல்வதற்கு முன்பு குடித்தால் மன அமைதியோடு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
English Summary
ho to make seemai samanthi tea