''பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது''; திருமாவளவன் பேச்சு..!
Thirumavalavan speech that we cannot be amused by those who criticize Periyar
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால், பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டிவனம் அருகே மறைந்த கட்சி நிர்வாகி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.
திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது" என்று பேசியுள்ளார்.
English Summary
Thirumavalavan speech that we cannot be amused by those who criticize Periyar