த.வெ.க.-யின் 05 ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்..!
TVK 05th phase district secretaries list has been published by President Vijay
நடிகர் விஜயின் அரசியல் பயணத்தின் முதல்படியாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. குறித்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த மாநாட்டை தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் கடந்த 24-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த மாவட்ட செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 05-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=1&st=75kfq593&dl=0
English Summary
TVK 05th phase district secretaries list has been published by President Vijay